முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 17 |
Untitled Document
72. | | பின்னும் பின்னும் எனைப் - பிறவிப் பிணியில் இடுவையேல், என்ன செய்வதெனத் - தினமும் எண்ணி நைவேனே. |
73. | | உள்ள துணர வேண்டுமெனில் உள்ளம் தெளிய வேண்டுமப்பா! கள்ளங் கபடா காதப்பா! கருணை பெருக வேண்டுமப்பா! அள்ளி உண்ணும் உணவுக்காய் அருமை கெடலா காதப்பா! எள்ளத் தனையும் மரணபயம் இல்லா திருக்க வேண்டுமப்பா! |
74. | | ஈச னிரங்கி அடியவருக் கினிய காட்சி யளித்திடுநாள் ஈச னடியார் யாவுமறந்து ஈச னடியே கண்டிருப்பர்; ஈச னடியைக் கண்டவர்பின் என்றும் மௌனம் கொண்டிருப்பர் ஈச னடிகா ணாதவரே எங்கும் முழங்கி அலைந்திடுவர். |
75. | | என்றும் ஈசன் திருவடிகள் இதயக் கமலம் சேர்ப்பீரேல், என்றும் கருணை ததும்பியெழும் இனிய உரைகள் உரைப்பீரேல், என்றும் ஏழை எளியவருக்கு இயன்ற உதவி புரிவீரேல், என்றும் என்றும் இவ்வுலகில் இனிய வாழ்வு வாழ்வீரே! | |
|
|