Untitled Document
1109 | | நாடு புகழ் ராஜாஜி திருநா மத்தால் நன்னகராம் நெல்லை நகரம் தன்னில் பீடுபெற அமையுமிந்தப் பிரசவ சாலை பேருலகில் வளர்ந்தோங்கி இனிதுவாழ தேடுமொரு மங்கையர்க்கு தாயாய் வந்து சிந்தைமகிழ் மகப்பேறு பார்த்தஈசன் தோடுடைய செவியன்விடை ஏறி வானத் தூவெண்பதி சூடிபதம் தொழுவோம் யாமே. |
170. அண்ணாமலை பல்கலைக்கழகம் |
1110 | | பத்திமிகுந் தன்பர் பணியும் திருத்தில்லை அத்திமுகத் தண்ணல் அருளாலே - தத்துதினா ஆழிசூ ழிப்புவியில் அண்ணா மலைக்கழகம் வாழியரோ வாழி வளர்ந்து |
1111 | | செய்ய தமிழும் ஆரியமும் சிறந்த கலைகள் பற்பலவும் தையல் பாகன் தண்ணருளால் தழைத்து வளரத் தில்லையிலே ஐயன் அண்ணா மலைமன்னன் அமைத்த கழகம் இமையம்போல் வைய மீது புகழோங்கி வாழ்க வாழ்க வாழ்கவே. |
1112 | | அள்ளற் பழனம் சூழ்தில்லை அணிமா நகரில் அரியகொடை வள்ளல் அண்ணா மலைமன்னர் வளர அமைந்த கலைக்கழகம் வெள்ளி விழாப்போல் வேறுபல விழாக்கள் கண்ட வேல்முருகன் புள்ளி மயில்வா கனன்அருளால் புவியில் வாழ்க வாழ்கவே. | |
|
|