பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு179

Untitled Document
பத்திரிகை வாழ்த்து (11)
171. சக்தி
1113 சித்தம் மகிழ்ந்துநம் செந்தமிழ்த்தாய் வந்திந்தச்
சத்திவடி விற்காட்சி தந்தனளால் - பத்தியொடு
நித்தமும் அன்பு நிலையத்தார் செய்துதரும்
புத்தணிகள் பூணும் பொருட்டு.

1114 கல்வி வளரக் கலைவளர நாடெங்கும்
செல்வம் வளரத் திருவளர - நல்வழிசேர்
புத்தி வளரப் புகழ்வளரத் தோன்றுமிச்
சக்தி வளர்க தழைத்து.

1115 நீணிலத்தி லன்பு நிலையத்தா ராதரித்துப்
பேணுதலால் சத்தி பிறந்ததினி - ஆணவம் கொண்
டெந்த மொழிவந் தெதிர்த்தாலும் வெற்றிநம்
சந்தத் தமிழ்மொழிக்கே தான்.

172 கல்கி
1116 புத்தம் புதுமலர்கள் பூக்குமே வண்டினங்கள்
சித்தம் மகிழ்ந்துண்ணச் சேருமே நித்தமும்
பல்கி வளரும் பசுந்தமிழ்ச் சோலை யாம்
கல்கி படர்ந்து வருங்கால்

173. புத்துயிர்
1117 கந்தன் குமரன் கடம்பன் கதிர்வேலன்
செந்தில் முருகன் திருவருளால் - முந்தவரு
புத்துயிர் மக்களுக்குப் புத்துணர்வை நன்கூட்டி
நித்தமுமே வாழ்க நினைத்து

174. குமுதம்
1118 செந்தில் முருகா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - முந்தவரு
செந்தமிழ் நாட்டில் சிறந்த குமுதமிது
சந்ததம் வாழவரம் தா.