பக்கம் எண் :

182கவிமணியின் கவிதைகள்

Untitled Document
180. பாரதி

1131 எத்தொழிற்கு முன்னின் றெமக்குத் துணிபுரியும்
அத்திமுகத் தண்ணல் அருளாலே - சித்தமகிழ்
கையெழுத்தில் வந்தினிய காட்சிதரும் பாரதிநீ
வையமிசை வாழ்க வளர்ந்தது.

181. 'மகிழ்ச்சி'

1132 ஐய மறவே பன்னூல்கள்
     ஆராய்ந் தறிந்த அரும்புலவர்
செய்ய தமிழில் அழகுபெறத்
     தீட்டும் எழுத்தோ வியங்களெலாம்
வையத் தெவரும் கண்டுள்ளம்
     மகிழத் தாங்கி வரு 'மகிழ்ச்சி'
பொய்யைப் போக்கி மெய்யறிவைப்
     போற்றிப் பொலிக பொலிகவே!

1133 பொங்கல் புதுநாளில் புண்ணிய நன்னாளில்
தங்குதை மாதத் தலைநாளில் - மங்கலஞ்சேர்
மாவிருதை பூத்த மகிழ்ச்சிமலர் வாழுகவே
யாவரும் போற்ற இனிது.

182. நெல்லைச் செய்தி

1134 நாடு சிறக்க அறிவோங்க
நல்ல நெறிகள் பலகண்டு
பீடு பெறவே செந்தமிழைப்
பெற்றஅன்னை யெனப் பேணி
நீடு நெல்லைச் செய்தியிது
நீணி லத்தில் வாழவரம்
ஆடும் தில்லை யம்பலவா
அருள்வாய் என்றும் அருள்வாயே.