பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு185

Untitled Document
187. அமுதசுரபி

1148 எத்தொழிற்கும் முன்நின் றெமக்குத் துணைபுரியும்
அத்திமுகத் தண்ணல் அருளினால் - முத்தமிழ்
அன்பருக்கு வாய்த்த அமுத சுரபியிது
மன்புவியில் வாழ்க வளர்ந்து.

வேறு

1149 கற்றார் மற்றார் எவ்வெவரும்
     கண்டு கண்டு களிப்படைய
வற்றா அமுத சுரபியிது
     வையத் தென்றும் வாழ்கவெனக்
குற்றா லத்தில் அமர்நாதன்
     குழல்வாய் உமையாள் பங்கனிரு
பொற்றாள் மலரை அன்போடு
     போற்றிப் போற்றிப் பணிவோமே!

வேறு

1150 என்னகமும் ஏந்துபுகழ் ஏரகமும் தங்கிடுவோன்
பொன்னகரம் காத்தபெரும் போர்வீரன் - பன்னிருகை
ஐயன் அருளால் அமுத சுரபியிது
வையமிசை வாழ்க வளர்ந்து.

1151 வேதப்பிரியான் விரிசடையான் வெண்ணீற்றான்
சீதப் பிறையான் திருவருளால் - ஏதுமின்றி
ஆழிசூழ் வையத்தமுத சுரபியிது
வாழியென் றென்றும் வளர்ந்து.

1152 கற்றார் மற்றா ரெவ்வெவரும்
     கண்டு கண்டு களிப்படைய
வற்றா அமுத சுரபியிது
     வையத் தென்றும் வாழ்கவெனக்
குற்ற லத்தி லமர்நாதன்
     குழல்வாய் உமையாள் பங்களிரு
பொற்றாள் மலரை அன்போடு
     போற்றிப் போற்றிப் பணிவோமே.