Untitled Document
1142 | | மெய்யெலாம் நன்கு விளங்கி வளர்ந்துவரப் பொய்யெலாம் மங்கிப் புறம்போக - வையமிசைப் புத்தொளி வீசிப் பொலிந்து 'தினமணி' நீ நித்தமும் வாழ்க நிலைத்து. |
1143 | | பொன்னமர்ந்த மார்பன் புவியளந்த சேவடியான் தென்னரங்கத் தெம்மான் திருவருளால் - மன்னுலகில் எக்கலையும் போற்ற எழுந்த 'தினமணி' நீ! மக்களிடை வாழ்க வளர்ந்து. |
1144 | | என்னகமும் ஓங்குதிரு ஏகமும் தங்கிடுவோன் பொன்னகரம் காத்தபெரும் போர்வீரன் - இன்னருளால் பல்லாண்டு வாழ்க! இப்பாரில் 'தினமணி' நீ! எல்லாரும் போற்ற இனிது. |
1145 | | வேத முதல்வன் விரிசடையன் வெண்ணீற்றன் ஆதி இறைவன் அருளாலே - பூதலத்தில் எவ்வறமும் போற்றி இனிய 'தினமணி' நீ! செவ்வையுற வாழ்க தினம். |
1146 | | தேடும்அடியவர்தம் சிந்தையிலும் அம்பலத்தும் ஆடும் பெருமான் அருளாலே - நீடுபுகழ் நன்னகராம் சென்னை நகரில் உதித்தகதிர் மன்னுலகில் வாழ்க வளர்ந்து. |
1147 | | எத்தொழிற்கும் முன்நின் றெமக்குத் துணைபுரியும் அத்திமுகத் தண்ணல் அருளினால் - முத்தமிழ் அன்பருக்கு வாய்த்த அமுத சுரபியிது மன்புவியில் வாழ்க வளர்ந்து. | |
|
|