முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 187 |
Untitled Document | | 191. தமிழ்ச் சோலை | 1158 | | பாவலர் உள்ளுருகப் பாடி பணிந் தொழுகும் தேவிமீ னாட்சி திருவருளால் - ஆவலொடு மாணவர் போற்றி வளர்க்கும் தமிழ்ச்சோலை நீணிலத்து வாழ்க நிலைத்த |
| | 192. காதல் | 1159 | | சுந்தரனுக் காகமுன்னம் தூதுவழி நடந்த சந்திர சேகரன் செய் தண்ணருளால் - வந்தநம் கண்ணெதிரில் நின்று களிப்பூட்டும் காதலித்து மண்ணுலகில் வாழ்க வளர்ந்து. |
| | 193. குமரன் | 1160 | | வாக்கினயங் கண்டும் மதிக்கும் பொருள் கண்டும் ஊக்கநடை கண்டும் உளமகிழ்ந்தோம் - ஆக்கமிகு செந்தமிழ்நா டாளவரும் செல்வக் குமராநீ சந்ததமும் வாழ்க தழைத்து. |
1161 | | பண்டிழந்த நாடும் பதியும் தமிழரசு கொண்டதுபோல் உள்ளம் குளிருமே - எண்டிசையும் பாரதியார் பாடல் பரிமளிக்க நீயணிந்தித் தாரணியில் வந்துலவத் தான். |
1162 | | அந்தி யிருளில் அலைபவருக் காதரவராய் வந்தருளும் காந்தி மதிபோலச் - செந்தமிழ்த் தாய் நாட்டினுக்கு நல்வேளை நற்றுணையாம் நல்வழியைக் காட்டுதற்குத் தோன்றினைநீ காண். |
| | 194. நாட்டியம் | 1163 | | அல்லும்பகலும் நின் றானந்தக் கூத்தாடும் தில்லைப் பெருமான் திருவருளால் - தொல்லுலகில் பல்லாண்டு நாட்டியம் பல்கி வளருகவே எல்லோரும் போற்ற இனிது. | |
|
|