முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 191 |
Untitled Document
1180 | | பள்ளிப் படிப்பறியான் பைந்தமிழும் ஆரியமும் தெள்ளிச் சுவைதேரும் செந்நாவான் - உள்ளிநிதம் சித்தம் சிவன்பால் செலுத்தும் கதிரேசன் நித்தம் வளர்க நிலத்து. |
1181 | | எங்கும் நிறைபொருளாய் எப்பொருட்கும் அப்பாலாய்த் தங்கும் தனிப்பொருளின் தண்ணருளால் - பொங்குபுகழ்ச் செந்தமிழத் தாய்பெற்ற செல்வன் கதிரேசன் சந்ததமும் வாழ்க தழைத்து! |
1182 | | சிந்தைக் கினிய செவிக்கினிய திருவா சகத்தின் உட்பொருளை முந்தும் அறிவால் ஆராய்ந்து முத்தே வர்க்கும் முதற்றேவன் எந்தை சிவனே யாமென்ன எவர்க்கும் நன்றாய் எடுத்தோத வந்த பெரும்பே ராசிரியன் வாழ்க வாழ்க வாழ்கவே! |
1183 | | இனிய தமிழைச் செந்தமிழை என்றும் ஓங்கி வளர்தமிழை கனியும் அன்புமிக இளைஞர் கற்று நெஞ்சம் களிப்பெய்த புனித முறையில் போதனைசெய் புலவர் பெருமான் கதிரேசன் நனியில் வுலகில் வாழவரம் நங்கை பாகன் நல்குவே! |
1184 | | ஆரிய யத்தின் நிலைகண்டோன், அரிய தமிழன் கடலானோன், பாரி அண்ணா மலைமன்னன் பரிந்து போற்று முதுபுலவன், தேரும் இனிய சொல்லால் எம் சிந்தை கவரும் கதிரேசன் பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்று நிதமும் வாழ்கவே! | |
|
|