Untitled Document | | பாரதியின் ஜயந்திவிழா மலரின் வாசம் பாரெங்கும் பாவிநிதம் பரிம ளிக்கச் சீருயரும் காளிகட்டப்பதியில் வாழும் தேவிபரா சத்திபதம் சேவிப் போமே. |
209. பண்டிதமணியின் கதிர்மணி விளக்கம் |
1195 | | பண்டிதர் போற்றுமகா பண்டிதா! நின்னை யெதிர் கண்டதுபோல் உள்ளம் களிப்படைந்தேன் - தண்டமிழ் வித்தர்க்கு வாய்த்த விருந்தாம் மணிவிளக்கப் புத்தகமென் கைவந்த போது. |
1196 | | வித்தகர்க் கமுதாம் நீத்தல் விண்ணப்ப உரையின் பாலுன் பத்தியின் ஆழம்கண்டேன்; பசுந்தமிழ் இனிமை கண்டேன்; புத்தியின் நுட்பம் கண்டேன்; புலமையின் வளமும் கண்டேன்; உத்தம உரைநீ தந்த உரையென்ற கைய முண்டோ? |
1197 | | புத்தி நுட்பம் கண்டேனுள் புலமை கண்டேன், சிவநெறிசேர் பத்தி கண்டேன், செந்தமிழின் பாகின் இனிய சுவைகண்டேன்; சித்தம்மகிழ்ந்து நண்பாநீ செய்த கதிர்மா மணிவிளக்கை எய்த்த நாளில் வைப்பாக எண்ணிப் போற்றி வாழ்வேனே! |
1198 | | வையகம் போற்றுதிரு வாசகத்தின் உட்பொருளைக் கையிற் கனியாகக் காட்டினால் - செய்ய தமிழ்ப் பேரா சிரியர் பெருமான் கதிரேசன் ஆராய்ந்து முற்றும்அறிந்து. | |
|
|