பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு195

Untitled Document
1199 வாசகமெல்லாம் மணிவா சகமாமோ?
காசசெல்லாம் காணும்பொற்காசாமோ? - பேசுலகில்
மன்னுமுரை யெல்லாம் மகிபால மாநகரான்
சொன்னவுரைக் கீடாமோ சொல்?

1200 தெய்வ மறையாம் திருவா சகப்பொருளை
ஐயமறக் காட்டும் அணிவிளக்கம் - வைய மிசைச்
செந்தமிழைக் கற்றுத் தெளிந்த கதிரேசன்
தந்த மணிவிளக்கம் தான்.

நூல் வாழ்த்து

1201 சீதி மதிபுனைந்து சிற்றம் பலத்தாடும்
ஆதி பகவன் அருளினால் - ஓதுபவர்
சித்தம் மகிழச் சிறந்திடும் மணிவிளக்கம்
நித்தமுமே வாழ்க நிலத்து.

1202 சிற்றம் பலத்தான் திருக்கையால் ஏடெழுதப்
பெற்ற பெரும்பேறு பெற்றநூல் - முற்றிலுமே
சித்தமுறக் கொண்டு தெளிந்த மணிவிளக்கம்
நித்தமுமே வாழ்க நிலத்து.

1203 கல்லைப் பிசைந்து கனியாக்க வல்லானெம்
தில்லைப் பெருமான் திருவருளால் - நல்லவொரு
வாடா விளக்காக வாழ்க மணிவிளக்கம்
நீடாழி சூழும் நிலத்து.

உரையாசிரியருக்குப் பாராட்டு

வேறு

1204 வற்றா அமுத ஊற்றாகி
     வழங்கு திருவா சகநூற்குக்
கற்றார் மெச்சும் மணிவிளக்கம்
     கண்ட புலவன் கதிரேசன்
உற்றார் சூழப் பல்லாண்டிவ்
     வுலகில் வாழஎம் பெருமான்
பொற்றா ளிணையை அன்போடு
     போற்றிப் போற்றிப் பணிவோமே!