பக்கம் எண் :

196கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1205 வையத் தென்றும் சிவஞானம்
     மலர்ந்து தெய்வ மணங்கமழச்
செய்யும்அரிய தமிழ்மறையாம்
     திருவாச கத்தின் உட்பொருளை
கையிற் கனிபோல்காட்டிநம்
     கதிரே சப்பே ராசிரியன்
தையல் பாகன் திருவருளால்
     தழைத்து வாழ்க வாழ்கவே!

வேறு

1206 வாதவூர் மாமுனிவன் மனங்க னிந்து
     மக்க ளெல்லாம் சிவ நெறிகண் டுய்யுமாறு
கோதிலா தமைத்ததிரு வாச கப்பூங்
     கோயிலுக்குச் சிறந்தகதிர் மணிவி ளக்கம்
ஓதரிய பேரன்பால் உபயம் வைத்தோன்
     ஓங்குபுகழ்க் கதிரேச நண்பன் தில்லை
ஆதிரையான் அழகிய சிற்றம்ப லத்தான்
     அருளாலே நீடுழீ வாழ்க மாதோ!

வேறு

1207 வண்டமிழ் நாட்டுக்கு வாய்த்த மணிவிளக்கம்
கண்ட கதிரேசன் கண்டதுபோல் - மண்டுபுகழ்
வாதவூர் அண்ணல் மனங்கண்ட மாதவரிப்
பூதலத்தில் உண்டோ புகழ்?

வேறு

1208 இன்னமுகச் செந்தமிழ்நூல் இன்னும் பலதந்து
மன்னுநலங் கண்டுநிதம் வாழியவே - துன்னுபுகழ்
பேரா சிரியர் பெருமான் கதிரேசன்
நீராழி சூழும் நிலத்து.

210. புதுமைப்பித்தன் நினைவு மலர்

1209 சிந்தைக் கினிய கட்டுரைகள்
     சிறந்த கதைகள் பற்பலவும்
தந்த புதுமைப் பித்தன்பேர்
     தமிழ்நாட் டன்பர் போற்றிடவே