பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு213

Untitled Document
1276 பைங்கிளிவா வாவென்று பங்கயச்செல்வியுனை
அங்கைகள் நீட்டி அழைத்தாளோ? - பொங்கு புகழ்
மங்கை சரோஜினி நீ வானுலாக வாழ்வுபெற
இங்கிருந் தேகினாய் இன்று.

1277 வெட்டி முறித்த விறகெனவோர் வீணையினைச்
சுட்டெரித்த பாவியென்று தூற்றாதோ? - சிட்டர் புகழ்
அன்னை சரோஜினியின் ஆவியுண்ட கூற்றமே!
உன்னையினி என்றும் உலகு.

1278 பைங்கிளியாய்த் தேன்கலந்த பாலமுதம் உண்மையாள்
அங்கையிலே தங்கியுரை யாடுதற்கோ? - இங்கிருந்து
மாதரசி நன்மதுர வாணி சரோஜினி நீ
மீதெழுந்து சென்றாய் விரைந்து

238. உ.வே.சா.
1279 எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பகுதியில்
எவ்வீடு நோக்கியின் றேகினையோ? - அவ்வான்
அமிழ்தம் அமிழ்தமென அள்ளியள்ளிச் சங்கத்
தமிழ்தந்த சாமிநா தா!

1280 கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல்
உண்ணப் பசியெழுவ தோராமல் - எண்ணி யெண்ணிச்
செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த திருத்தொண்டுக்
கிந்தநிலத் துண்டோ? இணை?

1281 சித்திரத்திற் பார்ப்போம்; சிலை செய்து கும்பிடுவோம்;
புத்தகத்திற் போற்றிப் புகழ்ந்திடுவோம் - இத்தரையில்
சந்தப் பொதிகைத் தமிழ்முனியென் றுன்னை நிதம்
சிந்தையிற் கொண்டு தெளிந்து

239. சகுந்தலை
1282 மண்ணில் இனிய வாழ்வினுக்கு
     வாய்த்த நல்ல துணை யென்ன
எண்ணி யிருந்த மணவாளன்
     ஏங்கி ஏங்கி உளம் வருந்தக்