பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு217

Untitled Document
  தேங்கி யன்பு கனிந்தொழுகத்
     தெள்ளத் தெளிந்த மொழிதருவோன்;
ஓங்கு புகழ்சத் தியநேசன்
     உலகை நீந்துச் சென்றனனே!

1296 சாதி மதபேதம் சற்றேனும் மின்றிநடு
நீதி வழுவா நெறிநின்று - பூதலத்தில்
சத்தியம் காணும் தரும தயாளனைநீ
நித்தியம் நெஞ்சே நினை.

1297 தேர்ந்த புலவன் தெளிந்த அடயோகி
வார்ந்தின் னமுதொழுகு வாக்கினான் - ஆர்ந்தபுகழ்ச்
சத்தியநேசத் தமிழன்புச் செல்வனைநீ
நித்தியம் நெஞ்சே நினை.

1298 மாசெலாம் போயகல மௌனவிர தம்காத்துப்
பூசனைகள் செய்தபெரும் புண்ணியவான் - பேசுபுகழ்ச்
சத்திய நேசன் சலியாநல் தொண்டனைநீ
நித்தயம் நெஞ்சே நினை.

1299 கண்ணாரக் கண்டு கடவுளைப் போற்றிநிதம்
பண்ணார்ந்த செந்தமிழ்ப்பா பாடுதற்கோ? - அண்ணல்நீ
மண்ணுலகில் எம்மை மறந்து மனந்தேறி
விண்ணுலகம் சென்றாய் விரைந்து.

1300 உத்தம நண்பன் உலகுபுகழ் ஞானியெம்
சத்ய நேசத் தமிழ்ச் செல்வன் - நித்தமும்
அண்ணலடி நீழல் அமர்ந்து புகழ்பாட
விண்ணுலகு சென்றான் விரைந்து

243. இசையரசு இலட்சுமண பிள்ளை

1301 கந்தருவ நன்கர்க்கோ? கண்ணுதல் சேவடிக்கோ?
சந்தமெழு தண்பொதிகைச் சாரலுக்கோ? - முந்துதமிழ்
இன்னிசை மன்னன் இலக்குமணன் ஏகினான்
மன்னிலத் தெம்மை மறந்த.