பக்கம் எண் :

216கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1291 மெய்யே நெஞ்சில் நாடிடுவார்
     விஞ்சும் பொறுமை பெற்றிடுவார்
வையம் மகிழ அருள் நெறியில்
     வாழ்வு கண்டு வாழ்ந்திடுவார்
தெய்வம் தொழுவார் நடு நீதி
     திறம்பா தென்றும் காத்திடுவார்
ஐய மின்றிக் காந்திமகான்
     அன்ப ராவார் அறிவீரே.

1292 வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தவன் வானுறையும்
தெய்வத்தோ டொத்த திருவுடையான் - பொய்யற்ற
காந்திமகான் கற்பனைகள் கற்றுக் கடைப்பிடித்த
மாந்தரென்றும் வாழ்வர் மகிழ்ந்து.

242. நீதிபதி சத்தியநேசன்

1293 தேடித்தேடி மக்கள் அழ,
     திகைத்த மனைவி சோர்ந்து விழ,
வாடி உற்றார் உறவினர்கள்
     வற்றாக் கண்ணீர் வடித்தலற
ஈடும் எடுப்பும் இல்லாத
     ஏக நீதி பதியென்றிந்
நாடு புகழ்சத் தியநேச
     நண்பன் எம்மைப் பிரிந்தனனே!

1294 ஈசன்பாதம் மறவாமல்
     என்றும் போற்றி வழிபடுவோன்;
ஆசைப் பேயைத் தலையில் அடித்து
     அடக்கி யாளும் ஆற்றலுளோன்;
கூசி டாமல் நடுநீதி
     கூறும் கூர்த்த மதியுடையோன்;
நேச மிகுசத் தியநேசன்
     நிலத்தில் வாழ்வு நீத்தனனே!

1295 ஆங்கி லத்தில் செந்தமிழில்
     அரிய நூல்கள் பலகற்றோன்;
பாங்கு பெறுதல் அடயோகப்
     பயிற்சி மிக்க பண்புடையோன்;