பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு219

Untitled Document
  தெய்வ ஞான தீபமெனத்
     திகழ்ந்த யோகி அரவிந்தன்
வையம் காணாப் பேரின்ப
     வாழ்வு கண்டு மறைந்தனனே!

வேறு

1306 பீடாரும் வங்க வளநா
     டதனில் பிறந்து வந்து,
நீடாழி மோது புதுவைப்
     பதியில் நிலைத்து நின்று,
வாடாது மங்கி மறையாமல்
     சூறா வளிவரினும்
ஆடா தொளிர்ந்த அரவிந்த
     ஜோதி அணைத்ததுவே!

246. செய்குத்தம்பிப் பாவலர்

1307 ஓரும் அவதானம் ஒருநூறு செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனைச் - சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பிப் பாவலனை
எந்தநாள் காண்பேன் இனி!

247. அனந்தகிருஷ்ண அய்யங்கார்

1308 ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து கற்றமகான்
பாரிலிணை யில்லாத பண்டிதன் - சீரிய
அந்தண சீலன் அனந்தகிருஷ்ண நண்பனையான்
எந்தநாள் காண்பேன் இனி!

248. தெ.சி. தீத்தாரப்பர்

1309 எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா! என்
அப்பா! அழகியசெல் லையா! நான் - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன்முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி?