Untitled Document 19. இராமகீர்த்தரின் போதனை |
99 | | ஓய்ந்து சோம்பி உறங்கா தேயடா! ஊக்கம் பெருக உழைத்துமுன்னேறடா! வாய்ந்த தொழிலில் மலையா தேயடா! மனமதில் ஒன்றி மகிழ்ச்சி கொள்ளடா! |
100 | | ஐயம் அடர்ந்துளம் அழியா தேயடா! அமைதி எந்நாளும் அடைந்திருப் பாயடா! நையப் பிரித்து நலியா தேயடா! நாடி இணங்கி நல்லுருப் படுத்தடா! |
101 | | மன்னிய மாமூல் வழுத்தியென் பயனடா! வாழ்நாட் கிசைய வாழ்வு வளரடா! உன்னிப் பகட்டுரை உரைத்தென் பயனடா! உள்ளத் துணர்ச்சி ஊன்றி உணரடா! |
102 | | கற்பனைக் குதிரை கடவுதல் ஒழியடா! காரியம் பொருளிற் கண்டு தெரியடா! விற்பனர் விதிகளை விளம்புதல் வீணடா! வினையில் விளைந்த விவேகம் காணடா! |
103 | | உயிரிலா மேற்கோள் உரைப்பதேனடா! உற்றவாழ் வின்பயன் உணர்ந்திங் கெய்தடா! வியனுல கத்தில் நலந்தரும் அனுபவ வேதாந் தத்தின் மெய்பொருள் ஈதடா! |
104 | | அன்னையப்ப னாகி அனைத்துலகும் ஆள்கின்ற தன்னந் தனிப்பெருமாள் தண்ணருளால் - மன்னுபுகழ் சித்தன் திருஞானச் செல்வன் சிவானந்தன் நித்தமும் வாழ்க நிலைத்து |
105 | | எங்கும் நிறைபொருளாய் எப்பொருட்கும் மேற்பொருளாய் தங்கும் தனிப் பொருளின் தண்ணருளால் பொங்குபுகழ் ஐயன் சிவானந்தன் அன்புருவ மானமகான் வையமிசை வாழ்க மகிழ்ந்து | |
|
|