முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 21 |
Untitled Document
95. | | மருளும் இவ்வுலகில் - ஏழை வருந்தி வாடாமல் அருட் பெருங்கடலே - உண்மை அன்பளிப் பாயம்மா! |
96. | | சிந்தனையில் போற்றிடுவோம்; செந்தமிழில் பாடிடுவோம்; வந்தனைகள் செய்து வணங்கிடுவோம் - முந்துபுகழ்ப் பாரதத்தாய் பெற்றபெரும் பாக்கியத்தால் வந்துதித்த சாரதத்தாய் வாசமலர்த் தாள். |
97. | | மண்ணில் வாழும் வாழ்நாளில் மாலை யிட்ட மணவாளன் கண்ணிற் கண்ட கடவுளெனக் கருதி வாழ்ந்த மாதேவி அண்ணல் ராம கிருஷ்ணாவின் அருமை மனைவி சாரதையை பண்ணில் பாடிப் புகழ்வோம்! பாத பூசை செய்வோமே! |
98. | | சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன், ஸ்ரீ ராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன்; பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்; பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்; வேர் பறிய எதிர்வாதம் விரித்துக் கூறி, வீண்வாதம் செய்பவரை வென்று, வெற்றித் தார்புனைந்த தவயோகி விவேகா னந்தன் தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே. | |
|
|