Untitled Document
87. | | சித்திகள் பெற்றரிய - செயல்கள் செய்ய வேண்டாமம்மா! பத்தியொ டுன்பாதம் - நிதமும் பணிதல் போதுமம்மா! |
88. | | மாசிலாத அன்பை - உன்னை மறக்க வொண்ணா அன்பை, தாசனாகும் அன்பை - எனக்குத் தந்தருள்வா யம்மா! |
89. | | காமம் அண்டாமல் - என்னைக் காக்க வேண்டுமம்மா! தீமை சாராமல் - உள்ளம் தெளி வேண்டுமம்மா! |
90. | | ஆன துணையிங்கே - பிள்ளைக் காரு மில்லையென, நானுரை யாமல் - நீயே நன்க றிவாயம்மா; |
91. | | ஜம்புலச் சேட்டை - முற்றும் அடங்க வேண்டுமம்மா! நம்பியுன் பதமே - உள்ளம் நாட வேண்டுமம்மா! |
92. | | ஏடு கண்டறியேன் - ஏட்டில் எழுத்தும் கற்றறியேன்; பாடிப் பாடியுனைப் - போற்றிப் பணிவ தெப்படியோ? |
93. | | உண்மை அன்பில்லை - ஞான ஒளியும் நெஞ்சிலில்லை; அண்மை யாகவந்துன் - பாதம் அடைவ தெப்படியோ? |
94. | | மண்ணில் உன்பிள்ளை - தனியே வாடி நிற்பதை நீ கண்ணி லெந்நாளும் - தாயே கண்டறியாயோ? | |
|
|