பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு19

Untitled Document
80.   வேதா கமங்கள் விரித்த பொருளையெலாம்
ஓதா துணர்ந்த உரவோனை - மாதா என்று
இத்தலத்து மங்கையர்கள் யாவரையும் காண்போனை
நித்தமுமென் நெஞ்சே நினை.

81.   எங்கும் நிறைபொருளாய் எப்பொருட்கும் மேற்பொருளாய்
தங்கும் தனிப் பொருளின் தண்ணருளால் - பொங்கு புகழ்
மாதவன் ராமகிருஷ்ணன் வாய்மலர்ந்த பொன்மொழியெப்
போதுமென் நெஞ்சேநீ போற்று.

16. பரமஹம்ஸரின் தேவி பிரார்த்தனை

82.   உன்னரு ளல்லால் - வேறிங்
     கொருதுணை யுண்டோ?
என்னை ஆண்டிடநீ - உள்ளம்
     இரங்க வேண்டுமம்மா!

83.   மாசிலாத அன்பு - நெஞ்சில்
     வளர வேண்டுமம்மா
ஆசை வேரெல்லாம் - அடியோ
     டழிய வேண்டுமம்மா!

84.   உலக மாயையிலே - சிக்கி
     உழன்று நையாமல்,
அலகிலாத வுன்றன் - அருளால்
     ஆள வேண்டுமம்மா!

85.   பொருளும் வேண்டாமம்மா! - எனக்குப்
     புகழும் வேண்டாமம்மா!
அருளே வேண்டுமம்மா! - வேறோர்
     ஆசை இல்லையம்மா!

86. கோயில் என்னெஞ்சாய் - என்றும்
     குடியிருப்பா யம்மா!
தாயின் அருளல்லால் - எனக்கோர்
     தஞ்சம் வேறுண்டோ?