பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு223

Untitled Document
1328 பாவலன்என் றென்னை மிகப் பாராட்டி உள்ளமகிழ்ந்
தாவலொடு போற்றியபே ரன்புடையன் - ஓய்வின்றி
மண்ணுலகில் நோயால் வருத்தவிட் டென்னேயோ
விண்ணுலகம் சென்றான் விரைந்து

1329 மன்னும் விஜய வருஷத்தில்
     மாசி ஐந்தில் செவ்வாயில்
பன்னற் கரிய முத்தமிழும் பாரில்
     போற்றி வளர்த்த மகான்
என்னை அன்பால் விலைகொண்ட
     இனிய ரசிகன் டி.கே.சி.
அன்னை தேவி உமைபங்கன்
     அரண்சே வடிக்கா ளாயினனே.