பக்கம் எண் :

232கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1375 அங்கயற் கண்ணிக்கும் அண்ணலுக்கும் ஆபத்தில்
தங்குமிடம் ஈந்த தனியூராம் - பொங்குபுகழ்
ஆரையூர்க் கீடாய் அவனியின் மீதெந்த
ஊரையான் சொல்வேன் உணர்ந்து.

266. நாடகம்
1376 கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்கு
எண்ணரிய போதனைகள் ஈவதற்கு - நண்ணுமிந்த
நாடக சாலையொத்த நற்கலா சாலையொன்று
நீடுகிலல் உண்டோ? நிகழ்ந்து.

267. அரியர் யார்?
1377 பெரியோர் செய்த பெரும்பிழை யதனைச்
சிறுபிழை யென்று தேய்த்து விடுவர்;
சிறியோர் செய்தது சிறுபிழை எனினும்
பெரும்பிழை யென்று பேரிகை கொட்டுவர்;
உள்ளதை உள்ளவா றுரைப்பவர்
அரியர் அம்மா அவனி மீதே!

268. முருகன் நிந்தாஸ்துதி
1378 தந்தை மலையாளி; தாய்மாமன் மாட்டிடையன்;
வந்தஒரு மச்சானும் வாணியனே - சந்ததமும்
விண்முகத்தை எட்டும் அயில் வேலேந்து பன்னிருகைச்
சண்முகற்குச் சாதியெது தான்?

269. சிரங்கு
1379 செந்தில் குமரா! திருமால் மருகா! என்
சிந்தை குடிகொண்ட தேசிகா! - நொந்தஇம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொறியக்
கையிரண்டு போதாது காண்.

1380 வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்;
வார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன்; குமரா! சிரங்கு
மறைந்திடத் தாநீ வரம்.

1381 உண்ட மருந்தாலும் உடல்முழுவ தும்பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு