முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 233 |
Untitled Document | | சிரங்கப்பா ராயா! சினமாறிக் கொஞ்சம் இரங்கப்பா, ஏழை எனக்கு. | 1382 | | முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம் பத்தியொளி வீசு பதக்கமெலாம் - சித்தன் சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம். |
| | 270. மான்தோல் பரிசு | 1383 | | எப்பே ரன்பன் எனக்கு இவ்வுரிய தூயகுண சண்முக சுந்தரன் - மேயபுகழ் ஆன்றோர் முனிவருங்கள் ஆசை கொள்ளும் சேர்புள்ளி மான்றோல் அணிந்தான் மகிழ்ந்து |
| | 271. தென்குமரி | 1384 | | தென்னெல்லை காத்தருளும் தேவி குமரிநின் பொன்னடியைக் கும்பிட்டுப் போற்று கின்றேன் - மன்னுபுகழ்ச் செந்தமிழ்நா டொன்றிகித் தேவர்நா டொத்துலகில் சந்ததமும் வாழவரம் தா. |
| | 272. இயற்கை அற்புதம் | | | ஆனந்தக் களிப்பு | 1385 | | அற்பிதக் காட்சி யீதையா - கண்ணுக் கானந்தம் ஆனந்தமையா |
1386 | | பொன்னிறம் காணுதே அண்ணா - ஒளி பொங்கி மரகதம் மின்னுதே அண்ணா சென்னெற் கழனியோ அண்ணா - இது செல்வத் திருவாழரங்கமோ அண்ணா |
1387 | | மேகம் படருது பாராய் - அதை வேட்டையாடிச் சுடரோட்டுது பாராய் ஏக மயமாக வேதான் - உல கெங்கும் பரந்தொளி வீசுது பாராய் |
1388 | | செங்கதிர் செய்யும் விழாவில் - மலர்த் தேனையு முண்ணாதலையுமே வண்டு தங்கு குளக்கரைத் தாரா - சுற்றித் தன்னை மறந்து முழங்குவதே ஐயா | |
|
|