பக்கம் எண் :

234கவிமணியின் கவிதைகள்

Untitled Document
மருமக்கள் வழி மான்மியம்
விநாயகர் வணக்கம்
1389 1   எம்பெரு மானே! இணையடி பரவும்
அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க
யானை நீள்கரம் ஏந்திய கடவுளே!
உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது

5   தந்தையோ,
என்றும் கையில் தலையோ டேந்தி
இரந்து திரிவான், இருப்பிட மில்லான்,
அம்பலந் தோறும் ஆடி அலைவான்,
அமிழ்தென நஞ்சையும் அள்ளி யுண்பான்,

  10   பித்த னாகிப் பேயொடு குனிப்பான்,
நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான்.
மாமனோ,
பூமக ளோடும், புவிமக ளோடும்
மதித்திட அரிய வளமெலாம் ஒருங்கு

  15   வைகுந் திவ்விய வைகுந் தத்தில்
ஆயிரம் பணாமுடி அரவணை மீதே
அறிதுயி லமர்ந்திவ் வகில மெல்லாம்
ஆளும் பெரிய அண்ணலே யாயினும்,
கபட நாடகன்; கையிற் சக்கரம்

  20   இருந்தும், எவர்க்கும் ஈயாக் கள்வன்,
ஆதலின், நீயும்,
தந்தை வீடெனத் தங்கிட மின்றி
மாமன் வீடென மதிப்பிட மின்றிச்
சந்தியும் தெருவும் தண்ணீர்க் கரையும்

  25   மரத்தி னடியும் வாழிட மாக
இருந்தனை, உன்போல் இருவழி கட்கும்
இடைவழித் தங்கி இடர்ப்படும் எங்கள்
வருத்த மெல்லாம் அறிந்திட வல்லவர்
அறிந்து முற்றும் அகற்றிடும் நல்லவர்