முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 235 |
Untitled Document | 30 | நடுநிலை கண்ட நாயகர் வேறிங்கு ஒருவரும் இல்லை; உன் திருவடி பணிந்து மருமக் கள்வழி மான்மியம் பாடத் தொடங்கினன், வந்து துணைநின் றிந்நூல் இனிது முடிய இதயம் | | 35 | கனிவு செய்தெனக் காத்தருள் வாயே. |
| | அவையடக்கம் | 1390 | 36 | அருந்தமிழ் அகத்தியன் ஆராய்ந் திடவும் கேள்வியிற் பெரியநக் கீரன் கேட்கவும் கல்வியிற் பெரியனாம் கம்பன் காணவும் இயற்றிய நூலிதென் றெண்ணவும் படுமோ? |
| 40 | மருமக் கள்வழி யென்னும் வனத்தில் புலிகள் சூழுமோர் புல்வாய் போல வலையிற் படுமோர் மணிப்புறாப் போல கொள்கொம் பற்றுத் துவள்கொடி போல, ஒருத்தி ஏழை ஒருதுணை யில்லாள் |
| 45 | தானும் மக்களும் தமிய ராகிப் பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப் புலம்பும் பொழுது, புண்ணிய சீலரே! தொல்காப் பியமுதல் பல்காப் பியங்களும் கற்றுத் தெளிந்த கவிவல் லோரே! |
| 50 | விகாரம் முற்றும் விரவி வருமலால் பொருட்சுவை சொற்சுவை பொருந்திவந் திடுமோ? எதுகை மோனை இசைந்துவந் திடுமோ? அணிகள் பற்பல அடுக்கிவந் திடுமோ? ஆதலின், இதனைப் |
| 55 | பதவியும் பணமும் படிப்பு மிலாதேன் பஞ்சப் பாட்டெனப் பழித்திக ழாதீர். இலக்கண வழுஉக்கள் இருப்பினும், அவற்றை வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின் நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின் | | |
|
|