பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு237

Untitled Document

  90 உற்றார் உறவினர் ஒருவரு மேயிலை;
ஒருதடி நிலமும் ஒரணை ஏரும்
ஒருசிறு குடிலும் உண்டெமக் காஸ்தி.
ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
உற்றதெ லாம்சொல ஒழிகழி நூலாம்,

  95 ஒருநாள் போதுமோ? இருநாள் போதுமோ?
முற்றும் கேளும், முடிவையும் பாரும்!
தாழையம் பதிக்குத் தலைவர் - அவர் பெயர்
ஏழையான் சொல்வது இசையுமோ? அம்மா!
பாவியாம் என்னைப் பதினா றாண்டில்

  100 ஐந்தாம் மனைவி யாக மணந்தனர்.
கணவர் வீட்டுக் கதையினைக் கேளும்;
மனைவியர் வேலை வகையினைக் கேளும்;
தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி,
தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி,

  105 அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி,
அண்டையில் அகலா திருக்க ஒருத்தி,
அத்தனை பேர்க்கும் அடிமை யாளாய்
ஏழை பாவி யானும் ஒருத்தி.
எளியேன் சென்ற நாள்மு லாக

  110 எல்லா வேலையும் என்தலை மேலாம்.
பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர்.
பெரிய அக்காள் பெருமாப் பிள்ளை
"ஏனடி அம்மா! யான்ஏ காங்கி.
உரிய அரிசி உண்டெனில் சோறு;

  115 உழக்குக் குறநொய் உண்டெனில் கஞ்சி;
மக்களைப் பெற்ற மகரா சிகள்நீர்
உண்ண வேண்டும், உடுக்க வேண்டும்;
உழைத்துப் பொருளுண் டாக்க வேண்டும்;
எனக்கினி யிங்கே யாதுண் டம்மா?"

  120 என்று பெருமூச் செறிந்து சொல்லி
இருந்த இடம்விட்ட டகலவே மாட்டாள்,