Untitled Document
| | அடுத்த அக்காள், அழுபிள்ளைக் காரி; அடமும் கொஞ்சம் அதிகம் கொண்டவள்; அம்மா, மிளிகை அரைஎன் றால்உடன் |
| 125 | அவள்கை மதலை அழுவது கேட்டிடும்; பிள்ளைக் குணமோ, பிடுங்கி வைப்பாளோ, என்ன மாயமோ, யானேதும் அறியேன். மூன்றாம் அக்காள் முழுச்சோம் பேறி. அன்றியும், |
| 130 | மூன்று மாதமாய் முழுகவு மில்லை; வாயா லெடுப்பாள் வயாக்கோட் டியினால்; ஏறின கட்டில் இறங்கவே மாட்டாள். இனியோர் அக்காள் எடுப்புக் காரி. இந்தி ராணியும் ஈடிலை; இவளது |
| 135 | மஞ்சள் பூச்சும் மயக்கிடு பேச்சும் சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும் கோல உடையும் குலக்கு நடையும் கொண்டை யழகும் கண்டு, கணவர் அண்டையி லிருந்தும் அகலவே ஒட்டார்; |
| 140 | 'தங்கப் பெண்ணே தாராவே! தட்டான் கண்டால் பொன்என்பான் தராசிலே வைத்து நிறுஎன்பான் எங்கும் போகாமல் இங்கே யேயிரு' என்று சொல்லுவ திவட்கே இசையும். |
| 145 | இவள், அடுக்களை வந்திடாள் - அரக்குப் பாவையோ? கரிக்கலம் கையெடாள் - கனகசுந் தரியோ? வாருகோ லேந்திடாள் - மகராணி மகளோ? வெயிலில் இறங்கிடாள் - மென்மலர் நொண்டியோ? |
| 150 | குடத்தை எடுத்திடாள் - குருடியோ நொண்டியோ? வஞ்சகி இவள்செய் தலையணை மந்திர உபதே சங்களை உண்மையென் றெண்ணிக் கணவன் ஒவ்வொரு காலத் தெங்களைப் |
| 154 | படுத்திய பாடெலாம் பகர்வதும் எளிதோ? | | |
|
|