முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 241 |
Untitled Document
1393 | | என்மகன் சாமி, ஏதோ ஒருநாள், அத்தை மகளென விளையாட் டாகவோ, வேண்டு மென்றோ, 'வீர லெச்சுமி! குலுக்கை போலக் குறுகிப் போனாயே! |
| 220 | எருமை போல இளைத்துப் போனாயே! பனந்தூர் போலப் பாறிப் போனாயே வயிற்றில் உனக்கு மடிப்புகள் எத்தனை? இன்னும் சிலநாள் இங்கிருப் பாயேல், வாசலும் வேறு மாற்றவே வேண்டும். |
| 225 | குதிலும் வெளியாய்க் கொஞ்ச நாளாச்சுதே! பத்தய நெல்லும் பாதி யாச்சுதே! நீங்களும் வந்து நெடுநா ளாச்சுதே! இந்த ஆடி முழுதுமிங் கிருந்து புதுநெல் வரினும் போகமாட் டீரோ? |
| 230 | நல்லது நல்லது, நல்லது அம்மா! தின்பவ னெல்லாம் தின்பான் போவான், திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான், அவியல் பொரியல் துவையல் தீயல் பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி |
| 235 | சாம்பார் கூட்டுத் தயிர்புளி சேரி சேனை ஏத்தன் சேர்த்தெரி சேரி பருப்பு பப்படம் பாயசம் பிரதமன் பழமிவை யோடு படைப்புப் போட எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்? |
| 240 | அரசனும் கூட ஆண்டியா வானே! இப்படி உண்மை யிருக்க, 'யாவும் மக்களுக் காக வாரிக் கொடுத்தான், கடன்கள் வாங்கினான், கைச்சீட் டெழுதினான். ஒற்றி கொடுத்தான்' என்றுன் பெற்றோர் |
| |
|
|