பக்கம் எண் :

242கவிமணியின் கவிதைகள்

Untitled Document

  245 எங்கள் ஐயாவைத் தூற்றவ தெல்லாம்
உணர்வில் லாமல் உளறுவ தல்லவோ?
என்று கூறிய மொழிகள் யாவையும்
மங்கை கேட்டு, மனம்நொந் தழுது.
ஒன்றைப் பத்தாய் பெருக்கி, உடனே

  250 தாய்க்குச் சொன்னாள்; தந்தையும் அறிந்தார்;
பையப் பையப் பாட்டியும் அறிந்தாள்;
யாவரும் கூடி, என்கண் மணியே
'உனக்கிங் கென்ன உண்டடா பயலே!
உடையக் காரியைத் தடைவையோ பயலே?

  255 பத்திர மாயிரு! பழைய காட்டர்க்கு
அனுப்பி விடுவேன், அறிநீ பயலே!
என்றிப் படிநா எழுந்தது சொல்லி,
ஏசி வசைகள் பேசிப் பிரம்பால்
ஐயோ! ரத்தம் சிந்த அடித்தனர்.

  260 காணா தென்று கண்ணில் மிளகும்
இட்டனர், இரக்கம் கெட்டவர் பாவிகள்.
நடந்ததை யெல்லாம் நன்கறிந் தாலும்,
யாதும் பேசா திருப்பர்என் கணவர்.