Untitled Document 345 | | கெஞ்சிக் கெஞ்சிச் சொன்னேன், அம்மா! கீழே விழுந்துகும் பிட்டேன், அம்மா! எதற்கும் அவர்கள் இணங்கினா ரில்லை. எளியேன் செய்யவே றென்னுண் டம்மா! கூகூ என்ற கூக்குரல் கேட்டுப் | 350 | | பக்கத் துள்ளாளர் பலரும் வந்தனர். ஊரார் எல்லாம் ஒன்றாய்க் கூடினர். விருந்தின ரெல்லாம் விரலை மூக்கில் வைத்த படியே மயங்கி நின்றனர். முடிவில், | 355 | | மேலவீட் டண்ணன் வெள்ளையம் பிள்ளை (நல்ல மனிதர், நடுநிலை யுள்ளவர், நாலுகா ரியமும் நன்றாய் அறிந்தவர், பட்டுத் தேறிப் பழக்கம் வந்தவர், என்ன செய்யலாம்! இறந்துபோ யினரே!) | 360 | | வந்தொரு வாறு வழக்கைத் தீர்த்தார்; ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்; இடையில், தீபா வளியோ, திருக்கார்த் திகையோ, | 365 | | வேறிம் மாதிரி விசேஷ நாளோ வந்திடு மாகில், வரிசை வரிசையாய் ஐந்திலை யிட்டவை அனைத்திலும் அமுது படைத்துப் புருஷன் பருகிய பின்னர் பரிகலத் துள்ள பதார்த்த மெல்லாம் | 370 | | மனைவியர் சரியாய் வகுத்துண வேண்டும். வழக்குகள் ஒன்றும் வரலா காது, எனக் கூறிப் போயினர்; கூடி யிருந்தோர் யாவரும், 'இதுவே நீதி' என்றனர். என்றவர் | 375 | | கலகமுண் டான காரண மறிந்து சிரித்து நின்றார், 'சீசீ' யென்றார் |
| |
|
|