பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு251

Untitled Document

    வயங்கரை மூசும் வைத்திய ரத்னமும்
எம்மா லாகா தென்றுகை விட்டிடில்
பிணியின் கொடுமை பேசவும் வேண்டுமோ?'

490   என்று கூறி யிருந்தனர், என்செய்வார்?
இங்கிலிஷ் டாக்டரும் இதற்கு மருந்துகள்
இருப்ப தாக இயம்பிடக் காணோம்.
இப்பிணி போல வெப்பை எழுப்பும்
பிணியிவ் வுலகில் பிறிதொன் றில்லை

495   ஈக்களும் தேடி யீட்டிய தேன்போல்
பலரும் பலநாள் பாடு பட்டுக்
கூட்டி வைத்த குடும்ப முதல்இத்
தீனம் கொண்டவர் தீண்டுவ ரேல், உடன்
ஆனை தின்ற விளாம்பழ மாம்; அதற்கு

500   ஐய மில்லை; அறியார் யாரே!
பாரும், பாரும், பத்திரமா யிரும்!
குடும்ப தோஷி என்றுமைக் கொண்டு
கோர்டில் கேஸீ கொடுப்பேன் பாரும்.
உண்மை யாக உம்மையும் அதனில்

505   சாக்ஷி போட்டு சமன்ஸை அனுப்பி,
வரவில்லை யானால் வாரண்டும் அனுப்பி,
(காலரை செலவாம் காரியமில்லை)
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்
'கிராஸீம் கேட்டுக் கேவல மாக்கி

510   விடவிலை யானால், வீர பத்திரன்
மகனென் றென்னை மதிக்கவே வேண்டாம்."