Untitled Document | | 7. கருடாஸ்திரப் படலம் | 1397 | | என்று மருமகன் இயம்பிய மொழிகளை மாமன் கேட்டு, மனமிக நொந்து "நல்ல தப்பா! நாகாஸ் திரங்கள் | 515 | | இத்தனை தானோ! இனிவே றுண்டோ? உன்னைச் சொல்ல ஒருகுறை யில்லை. கலியன் முற்றின காலமி தல்லவோ? என், மாமனார் இறந்து வருஷம்எட் டாக யான்படும் பாடெலாம் யாரே அறிபவர்! | 520 | | நாலாண் டாக நல்ல விளைவிலை; செலவு கழிந்ததே தெய்வச் செயலாம்; அடைமழை யாலே அழிந்ததோர் வருஷம்; வெயிலின் கொடுமையால் வெந்ததோர் வருஷம் போன ஆண்டில் பொலியே இல்லை, (வருஷம்); | 525 | | கொக்குநோய் விழுந்து குடியைக் கெடுத்தது; கார்விளை வில்லை, பசானம் கரிந்தது; விளைவிலை யாயினும் வீட்டுச் செலவில் ஒருகுறை யேனும் உண்டோ? அப்பா! பிள்ளைப் பேறும் பிறந்த நாளும் | 530 | | இல்லா வருஷம் இல்லையே, அப்பா! குடும்பச் செலவுகள் கூறி முடியுமோ? ஒன்றா? இரண்டா? ஒன்பதா? பத்தா? ஆண்டு தோறும் ஆலடி மாடன் கொடைக்கு ரூபாய் கொஞ்சமா செல்லும்? | 535 | | போன கொடைக்குப் புதிதாய் வந்த வில்லுக் காரி வீரும் மைக்கு நாலு சேலையும் ரூபாய் நாற்பதும் கொடுத்தது நீயும் கூடி யல்லவா? எனக்கு, | 540 | | சல்லடம் கச்சை தைக்க மாத்திரம் ஐம்பது ரூபாய்ஆச்சுதே, அப்பா! | | |
|
|