முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 253 |
Untitled Document | | போக்கில் லாத பயல்களைப் போலத் துணியை அரையில் சுற்றிக் கொண்டு நானும் ஆடினால் நன்றா யிருக்குமோ? | 545 | | காரணவன் என்றொரு கணிசம்வேண் டாமா? பிலே! சன்னதி முன்னே தறித்த கடாவுக்கு இருபது ரூபாய் எண்ணிவைத் தேனே! நீங்கள், | 550 | | அப்பன் மக்கள் அனைவரும் இங்கே இருந்து தின்றது போதா தென்று, கொடியிறைச் சிகளும் கொண்டு போனீரே? இந்தச் செலவுகள் ஏற்படு வதனால் மாடனை வணங்கா திருக்க லாமா? | 555 | | கடன்பட் டாயினும் காலா காலத்தில் வேண்டும் காரியம் செய்யவேண்டாமா? கொடைஓ ராண்டு கொடுக்க முடங்கினால் குடும்ப தோஷமும் குறையும் வராதோ? அடே! | 560 | | ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு ஆயிரம் பணமா? ஆறா யிரம்பணம் என்று சொல்லவுன் வாய்க்கிய லாதோ? பந்தல் இல்லையா? படை இல்லையா? பறைமே ளங்களும் பாட்டும் இல்லையா? | 565 | | நாலு தெருவும் நடைமாற் றில்லையா? காள மில்லையா, கருங்கொம்பில்லையா? களியல் கூத்தசை கம்புகள் இல்லையா? முரசு வாத்திய முழக்க மில்லையா? என்ன இல்லை என் தாய்க் கப்பா? | 570 | | தோசை ஆயிரம் சுட்டு மூலையில் ஆசை தீரவைத் தழுத தில்லையா? பத்துச் சாக்குப் பயறும் ஒன்றாய் அடுத்த கிழமையில் அவிக்க வில்லையா? தேங்காய், |
| |
|
|