Untitled Document 575 | | இரண்டா யிரத்துக் கதிகம் எடுத்து, வீடு வீடாய் விளம்ப வில்லையா? பதினா றான்று, பார்ப்பார்க் கெல்லாம், பட்டும் குடையும் பாத ரட்சையும் கட்டிலும் மெத்தையும் கடுக்கன்மோ திரமும் | 580 | | பாயச பாத்திரம் பஞ்சபாத் திரமும் அமுது படியும் அளிக்க வில்லையா? மேலும், பசுவும் கன்றும், பத்து மரக்கால் நிலமும், தானம் நெறிதவ றாமல் | 585 | | செய்ய வில்லையா? தினமும் வெற்றிலைச் செலவும் உனக்குத் தெரியா தோடா? படிப்புரை யருகில் வைத்த படிக்கம் பத்திர காளி பலிபீ டம்போல் ஆனதை நீயும் அறியா யோடா? | 590 | | பத்துப் பெண்கள் பட்டினி கிடந்து பருத்திப் பொதிபோல் பதினா றாம்நாள் வெளியில் வந்திட வேண்டுமானால், அவர், எத்தனை தோசை இட்டிலிக் கெல்லாம் | 595 | | ஏம காலரா யிருப்பார்? அப்பா! இட்ட செலவெலாம் எடுத்துச் சொன்னால் எண்ணி முடியுமா? எழுதி முடியுமா? சிதம்பரக் கட்டளை, செந்திற் கட்டளை, மதுரைக் கட்டளை வகைக்கொரு பூவில் | 600 | | எண்பது கோட்டை நெல்லில் உழக்குக் குறைந்த தானால் கொடுக்க முடியுமா? பேயும் அஞ்சும் பெரும்ப ழஞ்சி ஐய னிடத்தில் ஆண்டுதோறும் கொண்ட கடனைக் கொடுக்கா விட்டால், | 605 | | அவர், வயிற்றைஊத வைத்திடு வாரே! குறளியை ஏவிக் கொன்றிடு வாரே! |
| |
|
|