பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு255

Untitled Document

    நினைத்தி ராமல் நிகழும் எத்தனை
செலவுகள் வந்திடும், தெரியுமா உனக்கு?
'சானல் வாச்சர்' சந்தனத் தேவர்க்கு

610   'அட்ரஸ்' கொடுத்த வகைக்கோ ராறு
ரூபாய் இன்று ரொக்கம் கொடுத்தேன்.
இனி,
இந்த மாதம் இருபதாம் தியதி
'கார்டர்' அண்ணன் காடு மாறிப்

615   போகிறார், அவரைச் சும்மா போகச்
சொல்ல லாமோ? சொல்நீ அப்பா!
இப்படி யிப்படி இன்னும் செலவுகள்
எத்தனையோ வரும்; எண்ணில்அடங்குமோ?

620   உழவன் மீதி உழவுக் கம்பென
உலகம் சொல்வதும் உண்மை அல்லவோ?
பிலே! நீ,
ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தையே,
ஏ,பி,ஸி,டி எழுதத் தெரியுமா?

625   எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்!
எல்லாம் பாழுக் கிறைத்த நீர்போல்
ஆக்கி விட்டாயே, அவலட் சணமே!
அந்தச்
சாஸ்தாங் கோவில் சாந்தி அய்யர்

630   மகனுக் கெத்தனை வயது காணும்?
அவன்,
படித்து, பீ.ஏ. 'பாசாய்', நல்ல
பதவியி லிருப்பதைப் பார்க்க வில்லையா?
உண்மை, உண்மை! ஒரு தடையில்லை.

635   பட்டினி கிடந்து படிப்பவர் மட்டும்
பரீக்ஷை தேறுவர், பட்டமும் பெறுவர்!
அன்றி,
ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்,
போளிக் காகப் புத்தகம் பணயம்,