பக்கம் எண் :

256கவிமணியின் கவிதைகள்

Untitled Document
640   சீடைக் காகச் சிலேட்டுப் பயணம்,
முறுக்குக் காக மோதிரம் பணயம்,
காப்பிக் காகக் கடுக்கன் பணயம்,
'காலரு'க்காகக் காறை பணயம்,
கூத்துக் காகக் குடையும் பணயம்,

645   இப்படி யாக, எல்லாப் பணயம்,
வைத்துத் தின்னும் வயிற்றுக் கள்வர்
வாழ்ந்திடு வாரோ? வாழ்ந்திடு வாரோ?
முருக்கத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே!
நீ, பணயம் வைத்த பண்டம் அனைத்தும்

650   எத்தனை தரம்நான் மீட்டி யெடுத்துத்
தந்தேன், அப்பா! தந்தேன், அப்பா!
அடே,
ஆறு வருஷமாய் ஐக்கோர்ட் வரையும்
வழக்குப் பேசிஎன் மாமனா ருக்குப்

655   பணம் கடன் கொடுத்த பயல்களை எல்லாம்
பஞ்சாய்ப் பறத்தின பாதர் சிங்கமாம்
என்னையும் குடும்ப தோஷி என்றுநீ
சொல்ல வந்தாயே! சொல்ல வந்தாயே!
விலைக்கு விற்ற விளையை மைனர்

660   வியாச்சியம் செய்து, மீட்டினது உன்தன்
அப்பனா? நானா? ஆரடா? சொல்லு,
அன்பாய்ப் பேசும்உன் அப்பனால் உனக்கு
அரைக்கா சுக்கோர் ஆதாய முண்டோ?
மூத்த

665   காரணவர் பெற்ற கன்றுகள் கூடி
ஆயிரம் ரூபாய்க்கு ஆவ லாதி
வைத்ததை நீயும் மறந்தா யோடா?
அந்த
உகந்துடை மைப்பணம் ஒன்றும் அவருக்கு

670   இல்லா தாக்க என்னபா டெல்லாம்
பட்டேன் அப்பா! பார்த்தது மில்லையோ?