பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு257

Untitled Document

    குசும்பன் சாமியும், குண்டுணிச் சுப்புவும்,
உன்,
அப்பனும் கூடிஆலோ சனைகள்

675   செய்த தெல்லாம் தெரியும், தெரியும்!
அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவரைக்
காட்டச் சொல்போ, காட்டச் சொல்போ!
கோர்டில் வியாச்சியம் கொடுக்கச் சொல்போ!
'செருப்பா லடித்தா செலவுக்கு வாங்குவார்?'

680   வாங்கட்டும், வாங்கட்டும்! வட்டி முடையட்டும்!
நாஞ்சி னாட்டுக்கு நன்மையுண் டாகட்டும்!
இனியுள்ள காலம் எக்கா ரணவனும்
காடும் மேடும் கரையும் சுற்றி,
ஊணும் உறக்கமும் இன்றி உழைத்து,

685   விளையும் விளைவெலாம் வீசித் தூற்றி,
ஈரமும் பதரும் இல்லா தகற்றி,
சாக்கில் அளந்து தலையில் எடுத்து,
மாதா மாதம் மருமகன் ராஜா
திருவுளங் கொண்டெழுந் தருளி யிருக்கும்

690   கொட்டா ரத்தில் கொண்டு சென்று,
அவர்,
குறட்டைச் சுருதியில் கும்ப கர்ணப்
படலம் அன்பாய்ப் பாரா யணம்செயும்
காலமா யிருந்தால் காத்து நின்று, அல்லது,

695   நடுமனை கீறி, 'நாயும் புலியும்'
இஷ்டர்கள் கூட இருந்தி ழுக்கும்
வேளையா யிருந்தால் விலகி நின்று, அல்லது,
புகையிலை வாயிற் போட்டுக் கொண்டு
பொடியும் மூக்கில் ஏற்றிக் கொண்டு

700   'இறக்கு, வெட்டு' என இரைந்து கொண்டு
இடையிடைச் சண்டையும் எழுப்பிக் கொண்டு
பக்க மந்திரிகள் பலரொடும் சீட்டுக்
கச்சேரி செய்யும் காலமா யிருந்தால்
ஓரிடம் மாறி ஒதுங்கி நின்று,