பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு259

Untitled Document

    'வெளியில் சொன்னால் வெட்கமல்லவோ?
ஊரும் நாடும் ஒன்றாய்ச் சிரிக்குமே!
என்று பேசாது இருந்து விட்டேன்.

740   அடே,
செப்பில் கிடந்த திருக்குப் பூ, அன்று
எப்படி இறங்கி இரண்டாம் குடியாள்
கொண்டையில் சென்று குடியே றியது?
என்னைக் குடும்ப தோஷி யென்று

745   கூற உனக்குவாய் கூச வில்லையோ?
குடும்பத் துக்கொரு குறையும் வராமல்
காரியம் பார்க்கும் கார ணவர்களில்
எல்லா வகையிலும் என்னைப் போல
நல்லவர் இந்த நாஞ்சில் நாடு

750   பன்னிரண்டு பிடாகையில் உண்டோ?
என்று வீரம் பேசி எழுந்தனர்.