Untitled Document | | 8. வாழ்த்துப் படலம் | 1398 | | ...இக்கொடு மொழிகளாம் கருதற் கரிய கருடாஸ் திரங்கள் பலவும் நெஞ்சிற் பாய, மருமகன் | | 755 | புண்பட் டுள்ளம் பொறுக்க முடியாது, ஐயோ! என்றுகண் ணீர்விட்டு அழுது, தந்தை தாயார் தம்மிடம் சென்று விளைந்த எல்லாம் விரிவா யுரைத்தான்; கோபம் பொங்கிக் கொதித்து வரும்படி | | 760 | சிற்சில இடையிடை சேர்த்தும் கொண்டான். செப்பிய சொற்கள் தீயிற் காய்ச்சிய கம்பிகள் போல்இரு காதும் நுழைந்திட, வீரு பத்திரப் பிள்ளை வெகுண்டு, கால்நிமி ஷத்தில்என் கணவரைக் கண்டு, | | 765 | "அடடா மூடா! அதர்மசண் டாளா! வஞ்சகா! கொடிய மறவா! குறவா! நெஞ்சில் இரக்கம் இல்லா நீசா! மடையா! நீயென் மகனை நோக்கி ஊத்தை வாயால் உளறின மொழிகளை | | 770 | இன்னும் ஒருமுறை என்முன் வந்து சொல்லடா பார்ப்போம், சொல்லடா பார்ப்போம் பள்ளிப் பையனை, பதினா றாண்டு திகையாப் பாலனை, தெரியாச் சிறுவனை, கன்னியும் காப்பும் காணாக் குமரனை, | | 775 | கள்ளன் என்றும் கபடன் என்றும், கள்ளை யுண்டு களிப்பவன் என்றும், தடியன் என்றும் மடியன் என்றும், தாசிகள் வீட்டுத் தானிகன் என்றும், பழித்துப் பேசிய பாதகா! உன்தன் | | 780 | நாவை யரிந்து நாய்முன் எறிந்தா லன்றி என்சினம் ஆறாதே, அடா! | | |
|
|