பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு261

Untitled Document

    உன்மகன் சாமி ஒழுங்குகள் எல்லாம்
யான்அறி யேன்என் றிருந்தா யோடா?
அவன்,

785   பரத்தை நாடிப் பௌரணை தோறும்
கன்னிப் பதிக்குப் போகும் காரணம்
பக்தியின் மிகுதியோ? பணத்தின் மிகுதியோ?
உண்டு கொழுத்த உரத்தின் மிகுதியோ?
உண்மை யறிய உனக்கு முடியுமோ?

790   கள்ளுக் குடிக்கிற காரிய மெல்லாம்
மந்தா ரம்புதூர் மதுவிளை நாடான்
கிட்டின முத்துவைக் கேட்டால் தெரியும்.
நான்சொன் னால்நீ நம்புவை யோடா?
பள்ளியில் உன்மகன் படித்துப் பெரிய

795   பரீக்ஷையம் கொடுத்துப் பட்டமும் பெற்று ஒரு
மாதவ ராயராய் வரட்டும், அப்பா!
நாடும் நகரும் நடுங்கட்டும், அப்பா!
அழகு! அழகு! அதிசயம்! அதிசயம்!
பெற்ற புத்திரன் பெரும்பிழை செய்யினும்

800   சிறுவன் செய்த சிறுபிழை என்பாய்,
சினந்திட மாட்டாய், சிரித்து விடுவாய்.
ஏசினும் பேசினும் எட்டி யடிப்பினும் வாய்
மறுத்தரை செய்யாய், பொறுத்துக் கொள்வாய்
'மக்கள்மெய் தீண்டலுடற் கின்பம் மற்றவர்

805   சொற்கேட்டல் இன்பம் செவிக் 'கெனச் சொல்லும்
உண்மைக் குறளின் உட்பொருள் அறிந்து
நடப்பவர் உன்போல் நானிலத் தில்லை!
ஆனால்,
மருமகன் வந்து வணங்கி நின்று

810   வாழ்த்த எண்ணி வாயைத் திறக்குமுன்,
வைதான் என்று பொய்தான் சொல்வாய்!
அடியேன் என்று அவன் அங்கை கூப்பினும்,
அடித்தான் என்று அநியாயமே கூறுவாய்,
காரண வா! உன் காரிய மெல்லாம்