பக்கம் எண் :

264கவிமணியின் கவிதைகள்

Untitled Document

880   இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
மாறாக் கண்ணீர் வடிய விட்டுத்
தீராத் துயரம் திருநாள் எண்ணி
நைந்து நொந்து நாளைக் கழிப்பவர்
எத்தனை எத்தனை எத்தனை என்பேன்!"

885   என்றெலாம் சொல்லி இனிய மொழிகளில்
வாழ்த்தி நல்ல வரங்களும் கொடுத்துத்
தெருவில் இறங்கினார். சிறிது தூரம்
சென்று, பின்னும் சீறிச் சினந்து
வந்தார்; வந்த வரவில், மண்டை

890   படீரென வாசற் படியில் மோத,
முன்னிலும் கோபம் மூண்டு, "மூடா!
வஞ்சகா! உன்குட வண்டியைக் கலக்கிப்
போடுகிறேன் பார் ......... ....... .........
....... ......... ......... ........ ........ .......

895   ....... ........ .......... ........... ......... ........"
படபட என்று பற்பல மொழிகளைப்
பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா!
கணவரே,
வைய வைய வைரக் கல்லும்

900   திட்டத் திட்டத் திண்டுக் கல்லும்
ஆகி யிருந்தனர் ...... ........ ........ .......