பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு265

Untitled Document
9. கோடேறிக் குடி முடித்த படலம்
1399 ஐயோ! ஐயோ! அடங்கா வீர
பத்திரப் பிள்ளை, (பாவி பாதகன், என்
குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன்,

905 அரக்கன், ஏழரை ஆண்டைச் சனியன்)
விரைவில் ஒடி வீட்டில் சென்று,
மனைவியை அழைத்து மண்டையைக் காட்டி, உன்
அண்ணன் அடித்த அடிகளைப் பாரடி!
இன்றைக்கு,

910   உயிர்போ காமல் இருந்தது உன் தாலிப்
பாக்கியம் தானடி, பகவான் செயலடி!
அவன், எண்ணிப் பாராது ஏசின ஏச்சில்
கடுகள வேனும் உன் காதில் விழுந்தால், நீ
நஞ்சைத் தின்பாய், நான்று சாவாய்,

915   நாக்கைப் பிடுங்கி நடுங்கி இறப்பாய்,
ஆற்றில் குளத்தில் அலறி விழுவாய்,
சங்கிலித் துறைபோய்ச் சாடி யொழிவாய்;
இதற்கோர் ஐயம் இல்லை, இல்லையே!
என்னைப்

920   பறைப்பயல் பள்ளப் பயலினும் கேடாய்
நினைத்துப் பேசின நீசன் அவனை
வாயில் மண்ணை வாரி யடித்து
வீட்டை விட்டு வெளியி லிறக்கின
அன்றைக்கு அல்லவோ ஆண்பிள்ளை யாவேன்?

925   என்று பற்பல இன்னும் சொல்லி
கோபா வேசம் கொண்டவ னானான்.
கூட இருந்த குசும்பன் சாமி
போதா தென்று புகையும் போட்டான்.
வீணாய்க் கதையை விரிப்பதேன்? அம்மா!

930 அப்பனும் மகனும் அண்டை வீட்டுக்
குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும்