Untitled Document | | கோட்டு மாடன் பிள்ளையும் கூடி இரவு முழுதும் இருந்து, யோசனை பலவும் செய்து, பலபல வென்று | 935 | | விடியு முன்னம் விரைவா யெழுந்து, பானையில் கிடந்த பழவோ லைகளும் முறிப்பெட்டி யிலுள்ள முன்னோ லைகளும் கைச்சீட் டுகளும் கடச்சீட் டுகளும் கைச்சாத் துகளும் பொய்ச்சாத் துகளும், | 940 | | பத்திரச் சுருளும் பகர்ப்புச் சுருளும், எல்லாம் சுமடாய்க் கட்டி, இரண்டொரு முண்டைப் போட்டு மூடிப் பொதிந்து தோளில் வைத்துச் சுமந்து கொண்டு, நாகையம் பதியை நாடிச் சென்றனர். | 945 | | அங்கு, நீதிக் கெல்லாம் நிலைய மாகியும் உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும் கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும் வாழும் நியாய வாதிகள் தங்கும் | 950 | | வீதியை முற்ற விலகிச் சென்று வீண் விவகா ரங்கள் விளைநில மாகியும் பொய்கள் அடைக்கலம் புகுமிட மாகியும் குதர்க்கம் குடிகொளும் குகையிட மாகியும் திருஅவ தாரம் செய்தன் றிருந்த ஓர் | 955 | | அண்டப் புரட்டன் வக்கீல்ஆ பீஸில் ஆனைப் பொய்யன் குமஸ்தனை யறிந்து, காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்; 'காரணவ னைப்பல காரணத் தாலே மாற்றும் படிக்கு வந்தோம்' என்றார்; | 960 | | புற்றை விட்டுப் புறம்போ காமல் பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில் தேரை குதித்துச் சென்று விழுவது நாகம்முன் செய்த நல்வினைப் பயனோ? தேரைமுன் செய்த தீவினைப் பயனோ? |
| |
|
|