முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 267 |
Untitled Document 965 | | ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்! செல்லும் செலவு செய்திட, ரூபாய் நூற்றைம் பதுக்கோர் நோட்டு, வக்கீல் மைத்துனன் முத்து வாத்தியார் பேருக்கு எழுதி முடித்தார்; எடுத்து வந்த | 970 | | ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்; இவரிவர் சாக்ஷிகள் என்றும் சொன்னார்; வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும் மூத்த பிள்ளையே முதலாம் சாக்ஷி; மாத்தால் கணக்கு மகரா சன்மகன் | 975 | | பிச்சைக் காரன் பின்னொரு சாக்ஷி; இருக ணில்லா இருளப் பன்மகன் முத்தொளி மறவன் மூன்றாம் சாக்ஷி; ஐயம் பிள்ளை அண்ணாவி புதல்வன் நல்ல பிள்ளை நாலாம் சாக்ஷி; | 980 | | பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி யாடும் பெருமாள் ஐந்தாம் சாக்ஷி. நம்பர் பதித்த நாலாம் மாதம் ஒருநாள் காலை, உறக்கப் பாயில் எழுந்து என் கணவர் இருக்கும் பொழுது, | 985 | | கறுப்பன் கட்டையன் கப்படா மீசைக் காரன் ஒருவன், காலனைப் போல, கோர்ட்டுச் சம்மனைக் கொண்டு வந்தான், (நச்சுவா யண்ணன் நாச காலன்) வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான், | 990 | | எண்ணினது போல எல்லாம் ஆச்சுதே! நினைத்தது போல நேரம் விடிந்ததே! இந்நாள் இங்கு யான்படும் பாடெல்லாம், நாளை அவரும் மக்களும் அனுபவிப் பார்கள், | 995 | | யாதும் தடையிலை, யாதும் தடையிலை; பத்தினி என்சொல் பழுதா காது, உத்தமி என்சொல் ஊரையும் சுடமே; கேட்கும், கேட்கும், தெய்வம் கேட்கும்!) சேவகன் வந்த காரியம் தெரிந்தோ, | | |
|
|