பக்கம் எண் :

268கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1000   இயல்பாய்த் தானோ (யாதோ அறியேன்)
மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை
அண்ணனும் அப்பொழுது அங்கு வந்து,
'யார்இவன்' என்றனர்; 'இன்னார்' என்றோம்;
சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்து என்

1005   புருஷனை நோக்கி, "போனதெல்லாம்
போகட்டும், ஐயா! பொய்கைப் பற்றில்
ஆறு தடியும், அணஞ்சி விளையும்
துலுக்கன் தோப்பும், தொட்டிச்சி மேடும்,
மேலத் தெருவில் மேடை வீடும்,

1010   ஈரணை ஏரும், ஏழு பசுவும்,
யாதொரு கடனும் இல்லா மல், நீர்
இருக்க மட்டும் யாப்பிய மாகவும்
அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள்
ஒன்று விடாது உகந் துடைமை யாகவும்

1015   எடுத்துக் கொள்ள ஓர் ஓலை யெழுதி
உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல்,
வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல்
சும்மா இருப்பது மெத்த சுகமாம்.
இப்படி ராஜி எழுதிக் கொடுக்க

1020   உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும்,
வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து
கறகற வென்று கறங்கி மயங்கி,
கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி
வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம்,

1025   அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்!
தொல்லைக்குத் தூதுசொல்லிட வேண்டாம்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
பண்டொரு நீதிபதி, தம் கோர்ட்டு

1030   வாயிலின் வந்த மனித ரெல்லாம்,
உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி