பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு269

Untitled Document

    வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்,
தாட்பொதி யொன்று தலையிற் சுமந்து
வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்

1035   கண்களால் கண்டு கண்டு, நாளும்
நல்லறிவு எய்திட நடைநடை தோறும்
இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
செய்து வைத்த கதைதெரி யாதோ?
இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்

1040   இவைக ளன்றி வேறு எவையும் உண்டோ?
புத்தியில் லாஇரு பூனைகள் பண்டு
வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி
உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்

1045   நாம்,
பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ?
கோர்டில் சென்று குதித்திட வேண்டாம்.
அரையடிச் சுவருக் காகஜக் கோர்ட்டு
வரையிலும் ஏறி வழக்குப் பேசி

1050   அந்திர புரத்து மந்திரம் பிள்ளை
அடியோடு கெட்டது அறிய மாட்டீரோ?
வடக்கு வீட்டு மச்சம் பியும் அவர்
மருமக் களுமாய் வருஷம் எட்டாக
மாறி மாறி வாதம் செய்து

1055   யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம்
கண்ணால் இன்று காணவில்லையோ?
வேலுப் பிள்ளை வீட்டு நம்பரில்,
ஐந்தாம் சாக்ஷி ஆண்டி அவனை

1060   அழஅழப் படுத்தி, அறுபது ரூபாய்
வாங்கிக் கொண்டு, மேல் வாயிதாத் தோறும்,
'வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்,
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்;
பானையி லேபத் தரிசி இல்லை,