Untitled Document 1065 | | உப்போ புளியோ ஒன்று மில்லை, உச்சிக்கு எண்ணெய் ஒரு துளி யில்லை, தொட்டில் கட்டத் துணியு மில்லை, காந்தி மதிக்குக் கண்டாங்கி யில்லை, எனக்கும் வேட்டி யாதொன்றுமில்லை; | 1070 | | இப்படி யிருக்க, எப்படி உமக்காய் கோர்ட்டில் மொழிநான் கொடுக்கவருவேன்?' என்று சொல்லி, எத்தனை பணத்தைத் தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா! முளைய நல்லூர் முதல்பிடிப் பிள்ளை | 1075 | | அண்ணனும் இப்படி யாகக் காரணம், விளாத்திக் கோண விவகார மல்லவோ? எத்தனை வகையை இழந்தார், அப்பா! மூக்கரை யன்விளை மூலையில் நிற்கும் பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம் | 1080 | | தாங்கி, மீதியும் தருமே, அப்பா! அந்த மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர எல்லா நகையும் இறக்கி விட்டாளே! ஒவ்வொரு காதிலும்உழக்குழக் குப்பொன் | 1085 | | இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே! ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே கருந்தாளி உலக்கை கையில் எடுத்து அவள் கோவில் நெல்லைக் குத்துவாள் என்று யாவ ராயினும் எண்ணினது உண்டா? | 1090 | | என்ன செய்வாள், ஏழை! பாவம்! நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய் ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்? கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்? இதுவும் செய்யும், மேல் எதுவும் செய்யும்; | 1095 | | கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும், வல்லம் வல்லமாய் மாம்பழம் அனுப்பவும், |
| |
|
|