பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு271

Untitled Document

    பானை பானையாய்ப் பால்நெல் யனுப்பவும்,
மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்,
வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்,

1100   யாரால் முடியும்! யாரால் முடியும்!
எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்?
ஐயா,
வழக்கும் இழந்து வகையும் இழந்து
யாவும் இழந்து உளம் ஏங்கி யிருக்கும்

1105   கைலாசம் பிள்ளைக் கரையாளன் வீட்டை
வக்கீல் பீஸீ பாக்கி வகையில் எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?

1110   இந்த மாசம் எட்டாந் தேதி
மேலத் தெருவில் ..... வீட்டில்
ஜப்த்திக்கு வந்த தலைவன், ஐயோ!
எள்ளள வேணும் இரக்கமில் லாமல்,
அந்தக்

1115   கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும்,
தண்ணீர் குடிக்கும் சமயம் பார்த்துப்
பிள்ளைக் கெண்டியைப் பிடுங்கச் செய்ததும்,
சருவம் பானை சட்டுவம் அகப்பை

1120   குட்டுவம் செம்பு குழியல் முதலாய்
உப்போடு சிரட்டை ஒன்றுமில் லாமல்
எல்லாம் வண்டியில் ஏற்றிச் சென்றதும்,
நாம்
கண்ணாற் கண்டதோ? கனவோ? ஐயா!

1125   நாமெல்லாம் சேர்ந்து நடத்தின கட்சிக்
கொடையில், மாடன் கொண்டாடி நம்பி
சந்தனம் பூசிச் சல்லடம் கட்டிப்
பூவை யெடுக்கப் போன பொழுது,
வாறண்டுக் காரன் வந்ததை யறிந்து,