முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 275 |
Untitled Document | | சந்தேக மில்லை, சந்தேக மில்லை; நீர் அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்; | 1230 | | புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்; ஆளும் தரமும் அறிந்திட வல்லவர், சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்; ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்; பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்; | 1235 | | தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார், இரைந்து சொல்வார், எச்சில் எழும்புவார்; பார் பார் என்பார், பல்லைக் கடிப்பார்; போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்; அங்கும் இங்கும் அசையாதே என்பார், | 1240 | | குனியாதே என்பார், கோட்டைப்பார் என்பார், கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் கேள்விகள் பலவும் கேட்க வருவார். 'ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள் ஒன்றா? இரண்டா? உடன் சொலும்' என்பார்; | 1245 | | நாம், குதிரைக்கு ஏது கொம்புகள் என்றால் அது, கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்! 'கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்; | 1250 | | இரண்டா? ஒன்றா? என்பது என் கேள்வி; உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம் கேட்டேனா? ஓய்? காதுகேட் காதோ?' என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி விடுவார், குண்டில் விழுந்த குள்ள நரியைப் | 1255 | | படுத்தும் பாடெல்லாம் உம்மைப் படுத்துவார், இவர், ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால் பீரங் கிகளும் பின்னிட் டோடும்; பொல்லா தவர் அவர், பொல்லா தவர் அவர். |
| |
|
|