Untitled Document 1260 | | இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும் இணையா வாரோ? இணையா வாரோ? அறிந்து பிழையும், அறிந்து பிழையும் சொந்த வீட்டில் துரும்பையும் தூக்கி எறியச் சற்றும் இயலாது என்பவர், | 1265 | | வக்கீல் வீட்டில் வரிக்கல் பிடுங்கப் போவதும் எத்தனை புத்திகேடு, ஐயா! தங்கை மக்கள் தரித்திரம் அடைந்து வயிற்றுக்கு இன்றி வாடி யலைய, வருக்கை மாம்பழம் வாழைப் பழமும் | 1270 | | பெட்டிப்பா லும் பிஸ்கூத் துகளும், ஊரார் மக்கள் உண்டு களித்திட வாங்கிச் செல்வது மதியுளார் செயலோ? மேடும் காடும் வெட்டித் திருத்திப் பாறையும் உடைத்துப் படுநில மாக்கிப் | 1275 | | பருவம் அறிந்து பண்பட உழுது மண்ணலம் உணர்ந்து வளமிகப் பெய்து, வாசிறை மீண்டான் வளரச் செய்து, சம்பாப் பயிரைத் தழைக்கச் செய்து காலா காலத்தில் களைகள் எடுத்து | 1280 | | வேலியைக் கட்டி விலங்கினம் விலக்கிப் பறைகளைக் கெட்டிப் பறவையை ஓட்டி, நீரும் பாயச்சி, நிதமும் இராப்பகல் உறக்க மின்றி உழைப்பத னாலே விளையச் செய்த மேனிநெல் எல்லாம், | 1285 | | வக்கீல் வீட்டு வாயிலிற் கொண்டுபோய் விரித்துக் காய்ச்சி வீசித் தூற்றி அளந்து வாரி அறைக்குட் போட்டு வெறுங்கை யோடு வீடு போய் சேரும் நம்மவர் போல் இந்நானிலத் தொங்கும் | 1290 | | ஒருவ ரேனும் உண்டோ? ஐயா! மூச்சை யடக்கி முக்குளி போட்டுக் |
| |
|
|