பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு277

Untitled Document

    கீழுலகம் போய்க் கிடைத்த சிப்பியை
வாரி யெடுத்துமேலே வந்திடும்
முழுக்கா ளியினிடம் முத்தொன் றேனும்

1295   இருப்பதும் உண்டோ? எண்ணிப் பாரும்!
படிப்பிலார் தேடும் பற்பல பொருளும்
படித்தவர் வீட்டையே பார்த்துச் செல்லும்;
மூடர் முதலெலாம் வக்கீல் முதலாம்,
ஐயம் இதற்கிலை, ஐயம் இதற்கிலை,

1300   ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
மருமக் கள்வழி வழங்கும்இந் நாட்டில்
வீடுவீ டாயொரு கோடிருந்தாலும்
வழக்குகட்கு ஓய்வு வருமோ ஐயா?"

1305   என்று இவை யெல்லாம் எடுத்துச் சொல்லி
இறங்கிப் போனர். இக்கதை யெல்லாம்
நாலாம் மனைவி நாடகக் காரியின்
மாமன் மகன் ஒரு வக்கீல் குமஸ்தன்
அறிந்து வந்தான். "அண்ணே! அந்த

1310   வெள்ளையம் பிள்ளைக்கு வேலை யில்லை;
காடு கூப்பிடுது காலம் வரவில்லை;
வீடு போக்கிடுது, வேளைவ ரவில்லை?
கூனக் கிழவன் கோர்ட்டு வழக்கில்
என்ன அறிவான்? அவன்பேச் சையும் ஒரு

1315   காரிய மாகக் கருதிட லாமோ?
செல்வமும் கல்வியும் செழித்த நாட்டில்,
வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில்,
உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில்,
வழக்குகள் நிதமும் வள்வாந்து வருவது

1320   சகஜம் என்று ஸ்தாபித்திட நான்
'அத்தா ரிட்டிகள்' ஆயிரம் காட்டுவேன்
அண்டப் புரட்டன் வக்கீல், என்ன
ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ?
இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்?